சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூரில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுமலையனூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே திரண்டனர். பின்னர், திடீரென திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நீர்மட்டம் குறைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாள்களில் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai