சுடச்சுட

  

  கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காரப்பட்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
  கூட்டத்துக்கு புதுப்பாளையம் ஒன்றியச் செயலர் புருசோத்தமன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நைனாக்கண்ணு, மாவட்ட துணைச் செயலர் துரை
  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சிச் செயலர் ரமேஷ் வரவேற்றார்.
  சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கிப் பேசினார்.
  நிகழ்ச்சியில் தலைமைக்கழகப் பேச்சாளர் கலீல்பாட்ஷா, முன்னாள் ஒன்றியச் செயலர் லட்சுமணன் உள்பட புதுப்பாளையம் ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai