சுடச்சுட

  

  ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
  ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த காஸ்பெரான் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் சார்பில், சிஎஸ்இ, ஐடி, எம்சிஏ, இசிஇ துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வளாகத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
  நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, வளாகத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும், பணிக்குத் தேர்வு பெற்ற மாணவர்களை துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், சிறப்பு அலுவலர் பிரபு, வேலைவாய்ப்பு அலுவலர் வி.கந்தசாமி, நிறுவன அதிகாரி சையத்நஸ்ரியா, துறைத் தலைவர்கள் கே.சிவா, டி.பி.சண்முகம், கார்த்திகேயன், இளங்கோவன், ரீவன், யுவராஜ் உள்பட பலர் பாராட்டினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai