சுடச்சுட

  

  மண்டல விளையாட்டுப் போட்டி: சேத்துப்பட்டு தீயணைப்பு வீரர் ஒட்டுமொத்த சாம்பியன்

  By DIN  |   Published on : 04th March 2017 08:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர் கோவிந்தசாமி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றார்.
  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணிபுரியும் வீரர்களுக்கு இந்த ஆண்டுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில், வட மேற்கு மண்டலத்தை உள்ளடக்கிய திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1-ஆம் தேதிகளில் நடைபெற்றன.
  விளையாட்டுப் போட்டியை முன்னாள் இணை இயக்குநர் விஜயகுமார் தொடக்கி வைத்தார். இதில், அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்டங்கள் அடிப்படையில் திருவண்ணாமலை முதலிடம் பெற்றது. மேலும், தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சேத்துப்பட்டு தீயணைப்பு, மீட்புப் பணி நிலையத்தைச் சேர்ந்த வீரர் கோவிந்தசாமி பெற்றார்.
  இதேபோல, செய்யாறு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த வீரர்கள் வி.ரமேஷ், விஜயபாஸ்கர் ஆகியோர் இறகுபந்து போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வட மேற்கு மண்டல துணை இயக்குநர் மீனாட்சிவிஜயகுமார் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். இதில், திருவண்ணாமலை மாவட்டம், பெருமணம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏரி தற்கொலைக்கு முயன்ற நபரை விரைந்து சென்று பத்திரமாக உயிருடன் மீட்ட திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரர் சதீஷ்குமாரை பாராட்டி பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai