சுடச்சுட

    

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

    By DIN  |   Published on : 04th March 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி பிறந்த 25 குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தங்க மோதிரம் அணிவித்தார்.
    ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ஆம் தேதியை சிறப்பாக கொண்டாட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி பிறந்த 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை வகித்தார். நகராட்சி குழுத் தலைவர் குட்டி க.புகழேந்தி, நகர நிர்வாகிகள் பி.கே.ஆறுமுகம், இல.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் பிரபு வரவேற்றார்.
    நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம், கழிக்குளம் கிராமம் அகிலாவின் ஆண் குழந்தை, கீழ்பாச்சல் கிராமம் சங்கீதாவின் ஆண் குழந்தை, மேல்சோழங்குப்பம் கண்ணகியின் ஆண் குழந்தை, கடலாடி முருகம்மாளின் ஆண் குழந்தை உள்பட 25 குழந்தைகளுக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு, தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும், தாய்மார்களுக்கு ரொட்டி, பழங்களையும் அவர் வழங்கினார்.
    இதில், திமுக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மருத்துவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.வி.எம்.நேரு, சேஷா திருவேங்கடம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அ.அருள்குமரன், த.செந்தில்குமார், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    வந்தவாசி: இதேபோல, வந்தவாசி நகர, வந்தவாசி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
    இதையொட்டி, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட், பிருதூர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு புத்தாடைகள், வந்தவாசியில் அன்ன தானம் ஆகியவை வழங்கப்பட்டன.
    மேலும், கீழ்க்கொடுங்காலூர், வெண்குன்றம், பாதிரி, தென்னாங்கூர், கொட்டை, ஓசூர் ஆகிய கிராமங்களில் கட்சிக்கொடி ஏற்றி, அன்ன தானம் வழங்கப்பட்டது.
    விழாவுக்கு மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கட்சிக்கொடி ஏற்றி, அன்ன தானம் வழங்கினார்.
    ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.சுரேஷ்கமல், எஸ்.நந்தகோபால், நகரச் செயலர் கோட்டை பாபு, தொழிலதிபர் எம்.ஸ்ரீகுகன், பொதுக்குழு உறுப்பினர் எல்.அப்சர், நகர இளைஞரணி அமைப்பாளர் ஈ.மணிகண்டன், ஒன்றிய துணைச் செயலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai