சுடச்சுட

    

    வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக் கோரி, போளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    போளூர் அண்ணா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
    ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். குடிநீர்த் தட்டுப்பாடை போக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர், வட்டாட்சியர் புவனேஸ்வரிடம் கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai