சுடச்சுட

  

  வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 2-ஆம் ஆண்டு மயானக்கொள்ளை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அம்மன் வீதியுலா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து தொடங்கிய வீதியுலா கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கீழ்சாத்தமங்கலம் ஏரிக்கரையை அடைந்தது. அங்கு மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
  மாலையில் கோயில் வளாகத்தில் தீமிதி விழா நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் பி.மகேஸ்வரன், பி.பார்த்திபன், பத்மாவதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai