சுடச்சுட

    

    களம்பூரில் காளை விடும் விழா: ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 05th March 2017 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த களம்பூர் மேட்டுத் தெரு இளைஞர்கள் குழு சார்பில், 33-ஆவது ஆண்டு காளை விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில், களம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.
    விழாவை போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் தொடக்கி வைத்தார். பாய்ந்து வந்த காளைகளை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலையோரம் நின்று விரட்டியதுடன், அடக்கினர். எனினும், பல காளைகள், அடக்க முயன்ற இளைஞர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு ஓடின.
    அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும் மோட்டார் சைக்கிள், மொபெட், ஒரு பவுன், முக்கால் பவுன், கால் பவுன் அளவிலான நகைகள், பீரோ, ரொக்கப் பரிசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
    நிகழ்ச்சியையொட்டி ஆரணி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன், ஆய்வாளர் வினாயகமூர்த்தி, களம்பூர் சார்பு - ஆய்வாளர் அல்லிராணி ஆகியோர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காளைகளுக்கும், காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai