சுடச்சுட

    

    ஆரணி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
    களம்பூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி மண்ணம்மாள்(48). இவர், களம்பூரில் உள்ள அரிசி ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். மண்ணம்மாள் சனிக்கிழமை வேலைக்கு செல்வதற்காக களம்பூர் - போளூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மண்ணம்மாள் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    விபத்தை ஏற்படுத்திய கார், அந்த வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்த கஸ்தம்பாடியைச் சேர்ந்த ரங்கசாமி (40) மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர், ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
    விபத்து குறித்து தகவலறிந்த களம்பூர் போலீஸார், மண்ணம்மாள் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai