சுடச்சுட

  

  கோயிலில் அத்து மீறி தங்கியிருந்ததாக ஜீயர் உள்பட இருவர் கைது

  By DIN  |   Published on : 05th March 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் பேசும் பெருமாள் கோயிலில் அத்து மீறி தங்கியிருந்ததாக ஜீயர் உள்பட இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் பேசும் பெருமாள் கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இந்தக் கோயில் கடந்த 2013-ல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  இந்தக் கோயில் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சுதர்சன எத்திராஜ் (48) என்ற ஜீயர் அத்து மீறி தங்கியிருந்ததாகத் தெரிகிறது. கோயிலுக்கு சம்பந்தமில்லாத நிலையில் உள்ள சுதர்சன எத்திராஜ் ஜீயர் தங்கியிருப்பது குறித்து கிராம மக்கள், இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அறநிலையத் துறையினர் பலமுறை சுதர்சன எத்திராஜை வெளியேறும்படி அறிவுறுத்தியும் அவர் வெளியேறவில்லையாம்.
  இந்நிலையில், கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ராஜா, தக்கார் மனோகர், கிராம நிர்வாக அலுவலர் அருள், செயல் அலுவலர் உமேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், சுதர்சன எத்திராஜ் ஜீயரை அதிகாரிகள் வெளியேற்றி, ஜீயர் தங்கியிருந்த அறைக்கு பூட்டுப்போட்டு சீல் வைத்தனர். எனினும், சீல் வைக்கப்பட்ட அறையின் பூட்டை உடைத்து அத்து மீறி உள்ளே சென்று மீண்டும் சுதர்சன எத்திராஜ் ஜீயர் தங்கியிருந்தாராம். இதற்கு கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (43), சென்னையைச் சேர்ந்த பாக்சர் சுரேஷ் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
  இந்த சம்பவம் குறித்து கோயில் தக்கார் மனோகரன், தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து, சுதர்சன எத்திராஜ் ஜீயர், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாக்சர் சுரேஷை தேடி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai