சுடச்சுட

  

  வெம்பாக்கம் அருகே சிறுமிக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த திருமணத்தை வருவாய்த் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
  வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி விஜியா. இந்த தம்பதிக்கு சண்முகப்பிரியா (13) என்ற மகள் உள்ளார். இவர், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ராமச்சந்திரன் இறந்துவிட்ட நிலையில், ஒரே மகளான சண்முகப்பிரியாவை தாயார் விஜியா படிக்க வைத்தார்.
  இந்நிலையில், சண்முகப்பிரியாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நாட்டேரி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக சனிக்கிழமை மணமகள் அழைப்பு நடத்தப்பட்டது.
  இதனிடையே, இந்த திருமணம் குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு (சைல்டு லைன் 1098) தகவல் கிடைக்கப்பட்டதன் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பரமசிவம், வெம்பாக்கம் வட்டாட்சியர் க.பெருமாள், சமூக நல அலுவலர் வசந்தா, காவல் சார்பு - ஆய்வாளர் துரைசாமி மற்றும் போலீஸார், வருவாய்த் துறையினர் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
  அப்போது, திருமண வயதை எட்டாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று மணமகள், மணமகன் வீட்டாரிடம் அதிகாரிகள் எச்சரித்ததுடன், திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து சமூக நல அலுவலர் வசந்தா, பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai