Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த சு.பாப்பாம்பாடி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் சு.பாப்பாம்பாடி கிராமத்தில் சிறப்பு முகாம் அமைத்து பல்வேறு சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
    முன்னதாக, விவசாய தொழில்நுட்ப வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் மின்னணுவியல் துறைத் தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். மாணவர் ச.சந்தோஷ் வரவேற்றார். நிடாமின் இரிகேஷன் நிறுவன துணை மேலாளர் பி.ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, சொட்டு நீர்ப்பாசனம் குறித்து ஒளிப்பட காட்சி மூலம் விளக்கினார். சொட்டுநீர் பாசனமே சொர்க்க பூமியின் வாசல் என்று அவர் கூறினார்.
    நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் கே.சந்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் எல்.ஹரிகுமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தனர். தொடர்ந்து, நடைபெற்ற சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai