சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.192 கோடியில் 3,112 கட்டடங்கள் திறப்பு

  By DIN  |   Published on : 05th March 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் உள்பட ரூ.192 கோடி மதிப்பில் 3,112 கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சனிக்கிழமை திறந்து வைத்தார்.
  திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.4.63 கோடி மதிப்பில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு இருந்தது. இதேபோல, ஆரணியில் சிறு விளையாட்டு அரங்கமும் திறப்பு விழாவுக்காக தயாராக இருந்தது. இதேபோல, திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை, எரிசக்தித் துறை, வேளாண் துறை, நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை, வணிகவரித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பழங்குடியினர் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில்,
  ரூ.192 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 3,112 கட்டடங்கள் திறப்பு விழாவுக்காக காத்திருந்தன.
  இவற்றை சென்னையில் இருந்தபடியே தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தார். இத்துடன், திருவத்திபுரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
  போளூர்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் 2014 - 2015ஆம் ஆண்டில் போளூரில் ரூ.86.98 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  இதைத் தொடர்ந்து, போளூர் டிஎஸ்பி கோட்டீஸ்வரன், குத்துவிளக்கேற்றி காவல் நிலையத்தை தொடக்கி வைத்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழஙகினார். உதவி ஆய்வாளர் ராமசந்திரன், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குபேந்திரன், ரவி மற்றும் காவலர்கள் பலர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai