சுடச்சுட

  

  பெண் சாராய வியாபாரி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

  By DIN  |   Published on : 05th March 2017 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை அருகே தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
  திருவண்ணாமலை மது விலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீஸார், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சமுத்திரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரிக்கரை அருகே சாராயம் விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சியை (44) போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
  கைது செய்யப்பட்ட ஜான்சி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, ஜான்சி மீது பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு.வடநேரேவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற ஆட்சியர், ஜான்சியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
  இதற்கான உத்தரவு நகல், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான்சியிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai