Enable Javscript for better performance
விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி, விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவண்ணாமலையை அடுத்த வானாபுரம், மழுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரமேஷ் (40). இவரது மனைவி வள்ளி (35). ரமேஷ், அண்மைக்காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம்.
    இந்நிலையில், வியாழக்கிழமை வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதைக் கவனித்த உறவினர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரமேஷ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, வானாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai