அரசுக் கல்லூரியில் மார்ச் 8-இல் பட்டமளிப்பு விழா
By DIN | Published on : 06th March 2017 09:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வருகிற மார்ச் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
கல்லூரி வளாகப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் வேலூர் விஐடி பல்கலை. வேந்தர் ஜி.விஸ்வநாதன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்து, சிறப்புரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ரா.கீதாரணி, கல்லூரிப் பேராசிரியர்கள் செய்து வருகின்றனர்.