சுடச்சுட

  

  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சீ.சந்தான கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.ரமேஷ், துணைத் தலைவர் ஏ.ஏழுமலை, இணைச் செயலர்கள் பி.குமார், எஸ்.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாவட்டச் செயலர் கே.வேலுமணி வரவேற்றார். மாநில முதன்மைப் பொதுச் செயலாளர் கி.வெங்கடேஷ்வரன், மாநிலப் பொதுச் செயலர் கே.செல்வன், மாநிலப் பொருளாளர் எம்.ராஜ்குமார், மாநிலத் தலைமை நிலையச் செயலர் கே.சுடர்மணி, மாநிலச் செயலர் ந.சுரேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.
  கூட்டத்தில் ஏழாவது ஊதியக் குழு கமிட்டியை அமைக்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, ஆன்லைனில் சான்று வழங்கும் பணிக்கான செலவை அரசே ஏற்க வலியுறுத்துவது, உள்பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரையை பெற வேண்டும், கிராம நிருவாக அலுவலர்கள் பணி புரியும் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, கிராம நிருவாக அலுவலர்களுக்குச் சொந்த மாவட்டம், வட்டங்களுக்குள் பணி மாறுதல் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai