சுடச்சுட

    

    போளூரை அடுத்த குப்பம் ஊராட்சியில் காளை விடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கிப் பரிசுகள் பெற்றனர்.
    இதனையொட்டி, குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் சுவாமிக்கு, காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில், காளை விடும் விழா நடைபெற்றது.
    இதில் காட்டுகாநல்லூர், அரசம்பட்டு, கண்ணமங்கலம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் விடப்பட்டன. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர்.
    காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கு முதல் பரிசாக மொபெட், தங்க நகைகள், பணம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai