சுடச்சுட

  

  செண்பகத்தோப்பு நீர்தேக்கப் பயன் பெறுவோர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

  By DIN  |   Published on : 06th March 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போளூரை அடுத்த படவேடு அருகேயுள்ள செண்பகத்தோப்பு நீர்தேக்கப் பயன் பெறுவோர் - பாதுகாப்போர் நலச் சங்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அணையின் நீர் செண்பகத்தோப்பு கீழ்செண்பகத்தோப்பு, இராமநாதபுரம், மல்லிகாபுரம், படவேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயப் பாசனத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது.
  தற்போது இந்த அணையில் உள்ள நீரை மாவட்ட நிர்வாகம் விவசாயத்துக்காகத் திறந்து விடவேண்டும், மேலும், நீர் வற்றியவுடன் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  ஆலோசனைக் கூட்டத்தில் செண்பகத்தோப்பு நீர்தேக்கப் பயன்பெறுவோர் - பாதுகாப்போர் நலச் சங்கத் தலைவர் காந்தி, செயலர் செயசீலன், பொருளாளர் ருத்திரவேலு, செய்தித் தொடர்பாளர் அமல்ராஜ், விவசாயிகள், சமுக ஆர்வலர்கள், நீர்தேக்கப் பயன்பெறுவோர் நலச் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai