சுடச்சுட

    

    தேசிய அளவிலான கராத்தே போட்டி: அடையபுலம் பள்ளி மாணவிகள் சாதனை

    By DIN  |   Published on : 06th March 2017 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திரத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் ஆரணியை அடுத்த அடையபுலம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
    புதிய அணுகுமுறையிலான கல்வி திட்டத்தில் பெண் கல்வி உட்கூறின் கீழ், 2016 - 17ஆம் கல்வியாண்டில் ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த அடையபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
    இதையடுத்து, ஆந்திர மாநிலம், நகரியில் அகில இந்திய அளவில் நடைபெற்ற 13 முதல் 15 வயது உள்பட்டோர் பிரிவிலான கராத்தே போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஒன்றியங்களில் இருந்து மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், ஆரணி ஒன்றியத்தைச் சேர்ந்த அடையபுலம் அரசு நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி கே.தீபிகா முதல் பரிசும், ஆர்.சுபாஷினி 2-ஆம் பரிசும், எஸ்.திவ்யா, ஆர்.எழிலரசி, ஆர்.ரோகினி ஆகியோர் 3-ஆம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர்.
    இந்நிலையில், ஆந்திரத்தில் கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவிகளுக்கு ஆரணி வட்டார வளமையத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஆரணி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் புருஷோத்தமன், மாணவிகளை பாராட்டி, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) காமாட்சி, கராத்தே பயிற்சியாளர் குணசேகரன் மற்றும் தலைமை ஆசிரியர் பி.ஆனந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai