சுடச்சுட

  

  அனக்காவூர் வட்டார மையம் சார்பில், தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
  திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயகுமார் வழிகாட்டுதலின் படி, அனக்காவூர் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட குறுவள மையங்களில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.
  பயிற்சியின்போது, வளரிளம் பருவம், மன அழுத்த மேலாண்மை, நன்னெறிப் பண்புகள், சாலைப் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்புக் கல்வியின் அவசியம், சாலை விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், சாலை குறியீடுகள், சின்னங்கள், சைகைகள், சாலை விதிகள், சாலை பயணத்தின்போது பள்ளி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை,  செய்யக்கூடாதவை போன்ற பல தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. செங்காடு, புரிசை, செய்யாற்றைவென்றான், கூழமந்தல் ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு பயிற்சியை மாவட்ட உதவித் திட்ட அலுவலர்  சுப்பிரமணியன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
  செய்யாற்றை வென்றான், அனக்காவூர் ஆகிய குறுவள மையங்களில் நடைபெற்ற பயிற்சியில்  வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆ.சவுல்ராஜ் பங்கேற்று, பயிற்சி அளித்தார். அனக்காவூர், வீரம்பாக்கம், புதூர் ஆகிய குறுவள மையங்களில் வளரிளம் பருவம், மன அழுத்த மேலாண்மை, நன்னெறிப் பண்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
  பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் இரா.சக்திவேல், ம.பூச்செண்டு, ந.அனுசுயா, பா.முஹாம்மதுகெளஸ், வெ.அம்பிகா, தி.இசையருவி, மு.அபிராமி, வே.திருவேங்கட லட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். இதில் அனக்காவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட உயர் தொடக்க நிலை, தொடக்க நிலை ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai