சுடச்சுட

  

  "நீட்' தகுதித் தேர்வு குறித்த கருத்தரங்கம் ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கருத்தரங்குக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமத் தலைவர் எஸ்.கே.பி.கருணா தலைமை வகித்துப் பேசினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு "நீட்' தகுதித் தேர்வு எழுதும் நிலை உள்ளது.
  இந்தத் தேர்வை எழுத மாணவர்களை சிபிஎஸ்இ பாடப் பிரிவில் சேர்ப்பதா, மெட்ரிக். பாடப் பிரிவில் சேர்ப்பதா என்று பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.
  எனவே, இரண்டு பாடப் பிரிவுகளிலும் உள்ள சரியான, தவறான முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்த இரண்டு பாடப் பிரிவுகளிலும் சரியான முறையில் புரிந்துகொண்டு படித்தால் "நீட்' தேர்வை எளிமையாக அணுகலாம். சமச்சீர் பாடத் திட்டத்தை ஒரு சிலர் தவறாக சித்தரித்து, வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். சமச்சீர் பாடத் திட்டம் சரியான பாடத் திட்டமாகும்.
  அரசுப் பள்ளி மாணவர்கள் "நீட்' தேர்வை எழுதுவதற்கு 11, 12-ஆம் வகுப்புப் பாடத் திட்டங்களை தரம் உயர்த்த வேண்டும்.
  பள்ளிக் கல்வி என்பது மாணவர்களின் வாழ்க்கைக்கான வெற்றிப் படியாகும். எனினும் அதிக மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமே மாணவர்களின் வெற்றிக்கு வழி வகுக்காது. எனவே, கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் புரிந்து கொண்டு, தேர்வை அணுகும் விதமாக பாடங்களை நடத்த வேண்டும் என்றார் அவர்.
  கருத்தரங்கில் ஆரணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai