சுடச்சுட

  

  புகைப்படக் கடையில் ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

  By DIN  |   Published on : 06th March 2017 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறில் புகைப்படக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான கணினிகள், கேமரா, ரொக்கம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
  செய்யாறு, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர், அந்தப் பகுதியில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். சனிக்கிழமை மாலை கடையைப் பூட்டிவிட்டு, ஆரணியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்கச் சென்றார். மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) கடைக்கு வந்தபோது, கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 2 கணினிகள், மடிக் கணினி, கேமரா, ரொக்கப் பணம் ரூ. 21 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  இதுகுறித்து ஜெயபிரகாஷ் செய்யாறு போலீஸில் புகார் அளித்தார். அதன் போரில் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தடவியல் நிபுணரை வரவழைத்து விரல் ரேகை பதிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai