சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே பேருந்தில் சென்ற தொழிலாளி, நெஞ்சு வலியால் உயிரிழந்தார்.
    திருவண்ணாமலையை அடுத்த சே.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (57). கூலித் தொழிலாளியான இவர், சனிக்கிழமை காலை நகரப் பேருந்தில் திருவண்ணாமலை நோக்கி சென்றார். ஆணாய்ப்பிறந்தான் கிராமம் அருகே சென்றபோது ஏழுமலைக்கு, கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.
    இதனையடுத்து பேருந்தை அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று நிறுத்தினார். பேருந்தில் இருந்து கீழே இறங்கிய ஏழுமலை, சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai