சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் மைல் கல் மீது பைக்கை மோதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ளது எமலிங்கம். அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 40 வயது மதிக்கத் தக்கவர் பைக்கில் சென்றார். அப்போது, திடீரென சாலையோரம் இருந்த மைல் கல் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர், நிகழ்விடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை நகர போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை. சிவப்பு நிற மேல் சட்டை, நீல நிறத்தில் பேண்ட் அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai