சுடச்சுட

    

    மனித நேயத்துடன் கூடிய சமயம் மக்களை நல்வழிப்படுத்தும்: தி.வாதவூரார்

    By DIN  |   Published on : 06th March 2017 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனித நேயத்துடன் கூடிய சமயம் தான் மக்களை நல்வழிப்படுத்தும் என்று கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் தி.வாதவூரார் கூறினார்.
    திருவண்ணாமலை இறைபணி மன்றம் சார்பில், கிருத்திகை விழா சனிக்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரே நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் கு.மண்ணுலிங்கம் தலைமை வகித்தார்.
    இறைபணி மன்றச் செயல் தலைவர் மா.சின்ராஜ், உதவிச் செயலர் சோ.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவித் தலைவர் பா.இந்திரராஜன் வரவேற்றார். கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் தி.வாதவூரார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, "சமயமும் மனித நேயமும்' என்ற தலைப்பில் பேசினார்.
    எல்லா சமயமும் அன்பைத்தான் போதிக்கிறது. மதத்துக்கு மதம் பிடிக்கக் கூடாது. மனித நேயத்துடன் கூடிய சமயம் மட்டும்தான் மக்களை நல்வழிப்படுத்தும் என்று தி.வாதவூரார் பேசுகையில் குறிப்பிட்டார்.
    தொடர்ந்து, குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேவிகாபுரம் புலவர் ம.முத்துசாமி, இறைபணி மன்றத்தின் மாதர் அணித் தலைவி கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai