Enable Javscript for better performance
லாரி ஓட்டுநரைத் தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    வந்தவாசியை அடுத்த ஊத்துக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் கன்னியப்பன் (25). கடந்த பிப். 25-ஆம் தேதி இவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (45) மது போதையில் வந்து வீட்டுக் கதவை தட்டினாராம். இந்த நிலையில், வேலை முடிந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பிய கன்னியப்பனிடம் இதுகுறித்து அவர் மனைவி தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கன்னியப்பன், இதுகுறித்து செல்வத்திடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
    இதில் ஆத்திரமடைந்த செல்வம், கன்னியப்பனை கத்தியால் தாக்கினாராம். இதில் காயமடைந்த கன்னியப்பன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்து கன்னியப்பனின் தம்பி சீனு அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸார், செல்வத்தை சனிக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai