சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம், பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு அருகேயுள்ள ராயண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (54). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். சனிக்கிழமை (மார்ச் 4) காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த அரை பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 7 ஆயிரம் ரொக்கம், வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டிருந்ததாம். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸில் பலராமன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனர்.
    இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ராதாபுரம் பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை போலீஸார் நிறுத்தினர்.
    போலீஸாரைக் கண்டதும் அவர், பைக்கை வேகமாக ஓட்டிச் சென்றார். போலீஸார் அவரை துரத்திப் பிடித்தனர்.
    இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் நாகர்கோவில் அருகேயுள்ள புதுகிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜா (22) என்பது தெரிய வந்தது.
    மேலும், அவர் ஓட்டி வந்த பைக் விவசாயி பலராமன் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். பலராமன் வீட்டில் திருடப்பட்ட பைக், நகை, ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai