Enable Javscript for better performance
வேன் மோதியதில் பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தானிப்பாடி அருகே வேன் மோதிய விபத்தில் காயமடைந்த பெண்  இறந்தார்.
    தானிப்பாடியை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் மனைவி குந்தியம்மாள் (48). இவர், சனிக்கிழமை காலை தனது வீட்டு வாசலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, தானிப்பாடியில் இருந்து இளையாங்கன்னி நோக்கிச் சென்ற வேன், குந்தியம்மாள் மீது மோதியதாம். இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து, தானிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai