சுடச்சுட

    

    செங்கம் அருகே அரசுப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
    செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளி மாணவர்களின் அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
    இதனை திருவண்ணாமலை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களைப் பாராட்டினார்.
    புதுப்பாளையம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட், பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வெள்ளச்சிசுந்தரம், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன், கல்விக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், வெங்கடேசன், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai