சுடச்சுட

    

    உலக தமிழ்க் கழக திருவண்ணாமலை கிளையின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சிறப்புத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், துணைத் தலைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ப.குப்பன் வரவேற்றார்.
    கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை மாதம், பள்ளி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும், குழந்தைகள் இல்லங்கள், அங்காடிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்ட விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    உலக தமிழ்க் கழகப் பொருளாளர் கோவிந்தசாமி, துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai