சுடச்சுட

  

  திருவண்ணாமலையில் ஓ.பி.எஸ். அணியினர் புதன்கிழமை (மார்ச் 8) உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர்.
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தக் கோரி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
  திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு, தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஆரணி ஒன்றியச் செயலர்கள் அரையாளம் வேலு, பி.ஆர்.ஜி.சேகர், ஆரணி நகரச் செயலர் ஏ.அசோக்குமார்  உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிமுகவின் உண்மை விசுவாசிகள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் அழைப்பு விடுத்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai