சுடச்சுட

  

  செய்யாறை அடுத்த அனக்காவூரில் அமைந்துள்ள விஸ்டம் கலை - அறிவியல் கல்லூரியில் வணிகம் தொடர்பான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
  கல்லூரி வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முகமது வாசிம் பாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் எல்.குப்புசாமி, பணமதிப்பு குறைப்பு என்ற தலைப்பிலும், சரக்கு மற்றும் சேவை வரி என்ற தலைப்பில் புதுவை பல்கலை. வணிகவியல் துறைப் பேராசிரியர் ஏ.பாண்டுவும் பேசினர்.
  இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் எஸ்.மோகன், துறைப் பேராசிரியர்கள் கார்த்திகேயன், முருகன், ரஜினி, செல்வி, வடிவுக்கரசி ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai