சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, தொடர்ந்து குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள மாணவ - மாணவிகள் குடிநீர் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்கள்கிழமை விடுதியில் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கல்லூரியின் நிர்வாக அலுவலகம் எதிரே அமர்ந்து அவர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
    சாத்தனூரில் சாலை மறியல்...: தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரை அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தகவலறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிதிமால், கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று ஏற்பாடு செய்து உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
    காவேரியாம்பூண்டியில்..: திருவண்ணாமலையை அடுத்த காவேரியாம்பூண்டி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
    இதையடுத்து பொதுமக்கள், திங்கள்கிழமை காலை காவேரியாம்பூண்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்னைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல, துரிஞ்சாபுரம் ஒன்றியம், நூக்காம்பாடி கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai