சுடச்சுட

    

    கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து எரிவாயு நுகர்வோர்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 07th March 2017 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, எரிவாயு நுகர்வோர்கள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்ட அனைத்து நுகர்வோர்கள் சார்பில், 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
    கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலர் நார்த்தாம்பூண்டி ஜெ.சிவா தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த விவசாயிகள் உரிமை மீட்பு சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜி.சரவணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், நுகர்வோர் குறைதீர் கூட்டங்களை மாவட்ட, கோட்ட அளவில் நடத்த வேண்டும், எரிவாயு விநியோகஸ்தர்கள் கூடுதலாக ரூ. 40 முதல் ரூ. 70 வரை வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    இதில், வாக்கடை புருஷோத்தமன் உள்பட ஏராளமான எரிவாயு நுகர்வோர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai