சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை ஒன்றியம், ஊராகவுண்டனூர் ஊராட்சிக்கு உள்பட்ட மலைக் கிராமமான குட்டூருக்கு தார் சாலை அமைக்கக் கோரி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலர் மணி தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., நஞ்சப்பன் கலந்துகொண்டு, செங்கத்தை அடுத்த பண்ரேவ் முதல் படபஞ்சனூர் வரை தார் சாலை அமைக்க வேண்டும், ஜவ்வாதுமலை கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வருபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கத்தில் இருந்து பண்ரேவ் கிராமத்துக்குக் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
    இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் மாவட்டச் செயலர் ஜோதி, மாநிலத் துணைத் தலைவர் ஹமீத், ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் சர்தார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகிகள், மலைக் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai