சுடச்சுட

    

    ஆரணி அரிமா சங்க வளாகத்தில் அரிமா சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து சர் சி.வி.ராமன் துளிர் அறிவியல் விழாவை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர்.
    அறிவியல் இயக்கக் கிளைத் தலைவர் எம்.பக்தவச்சலம் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலர் சதீஷ்பாபு, சி.பட்டாபி, எ.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜோதி வரவேற்றார்.
    இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மாணவர்களின் எதிர்காலக் கனவுகளும் என்ற தலைப்பில் ஆர்க்காடு எ.ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். துளிர் திறனறவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அபி, இரண்டாமிடம் பிடித்த சுவேதா, புங்கம்பாடி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவிகளை பாராட்டி, அரிமா சங்கத் தலைவர் வி.செந்தில்வேல், செயலர் கோ.சந்திரசேகரன், பொருளாளர் எல்.சுகுமார் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
    அறிவியல் இயக்க மாவட்டக் குழு எஸ்.சுப்பிரமணி, எல்.ஐ.சி. முகவர் கே.கேசவன், ஆசிரியர்கள் கமலக்கண்ணன், அசோகன், லோகநாதன், ஜெயப்பிரகாஷ், கோ.கோபால்சாமி, ஜி.நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai