Enable Javscript for better performance
தேசிய பாதுகாப்பு வார விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் தொழிலாளர் துறை சார்பில், தேசிய பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடைகள், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    ஆரணியில் மார்ச் 4-ஆம் தேதி முதல் 10 வரை தேசிய பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    இதனையொட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தொழிலாளர் ஆய்வாளர் க.ரவிஜெயராம் தலைமையில் வணிகர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு தொழிலாளர் துணை ஆய்வாளர் கி.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். உதவி ஆய்வாளர் வே.முனியாண்டி வரவேற்றார்.
     இதில், ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பேச்சிக்காளை, மின்வாரிய அதிகாரிகள் ஆர்.சம்பத், கோவிந்தராஜ், எழிலரசி, வணிகர் சங்க நிர்வாகிகள் அருண்குமார், நடராஜன் ஆகியோர் பங்கேற்று கடைகள், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பேசினர். கூட்டத்தில் வணிகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai