சுடச்சுட

    

    நியாய விலைக் கடையில் விற்பனையாளர் - பொதுமக்களிடையே வாக்குவாதம்

    By DIN  |   Published on : 07th March 2017 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வந்த பொதுமக்களுக்கும் விற்பனையாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பரபரப்பு நிலவியது.
    திருவண்ணாமலை, கிருஷ்ணன் தெருவில் நியாய விலைக்கடை இயங்கி வருகிறது. இங்கு, சில மாதங்களாக அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மார்ச் மாதத்துக்கான பொருள்களை 6-ஆம் தேதியாகியும் வழங்கப்படவில்லையாம்.
    மேலும், இருப்பில் உள்ள பொருள்களைக் கூட கடை விற்பனையாளர் சரிவர விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    எனவே, காலை முதலே ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர். காலை 10 மணிக்கு வந்த விற்பனையாளர், சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சில மாதங்களாக பொருள்களை சரிவர வழங்கவில்லை என்று விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    தகவலறிந்து வந்த திருவண்ணாமலை வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விற்பனையாளர் மீது பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர்.
    இதனால் ஆத்திரமடைந்த விற்பனையாளர் அவர்களை அடிக்கப் பாய்ந்தாராம். இதன் காரணமாக பொதுமக்கள் கடையைத் திறக்கவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai