பள்ளிகளுக்கு மடிக் கணினிகள் அளிப்பு
By DIN | Published on : 07th March 2017 06:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செய்யாறு பகுதியில் 25 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான மடிக் கணினிகளை ரோட்டரி சங்கத்தினர் அண்மையில் வழங்கினர்.
சென்னை தெற்கு ரோட்டரி சங்கம், போர்டு கம்பெனி சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்ட மடிக் கணினிகளை செய்யாறு நகர ரோட்டரி சங்கத்தினர் பெற்று வந்து, அந்த ஒன்றியத்தில் உள்ள 6 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும், அனக்காவூர் ஒன்றியத்தில் உள்ள 6 அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 13 தொடக்கப் பள்ளிகளுக்கும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கே.நல்லாண்டி தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.லோகநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ரோட்டரி சங்க உதவி ஆளுநர் பி.தாண்டவராயன், அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு மடிக் கணினிகளை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கச் செயலர் எஸ்.அன்பு, பொருளாளர் எம்.தங்கராஜ், சங்க நிர்வாக இயக்குநர் சி.சாந்தாராமன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.