சுடச்சுட

  

  போளூர் அல்லி நகரில் அமைந்துள்ள பூங்காவனத்தம்மன் கோயிலில் மாசி மாதத் திருத்தேரோட்டம் அண்மையில் நடைபெற்றது.
  அல்லி நகரில் பூங்காவனத்தம்மன், அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நிகழாண்டுத் தேரோட்டம் அண்மையில் நடைபெற்றது.
  இதனையொட்டி, பூங்காவனத்தம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் வைத்து, திருத் தேரோட்டம் நடைபெற்றது.
  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஊர்ப் பொதுமக்கள், தேரில் வந்த அம்மனுக்கு தங்கள் வீடுகளில் தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai