Enable Javscript for better performance
வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 07th March 2017 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மாதத் திருவிழா முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
    சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் பிப்ரவரி 24-ஆம் தேதி மாசி மாதத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதனையொட்டி, வெள்ளகுளத்தில் இருந்து சக்திக் கரகம் எடுத்து வரப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கடந்த மார்ச் 2-ஆம் தேதி மாலை கோயில் வளாகத்தில் தீமிதி திருவிழாவும், இதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றன.
    இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளகுளத்தில் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அங்குள்ள கோயில் குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிவன், அங்காளபரமேஸ்வரி சுவாமிகளின் கலசங்கள் தெப்பலில் வைக்கப்பட்டு வலம் வந்தன.
    விழாவில் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், விழுப்புரம், சென்னை, புதுவை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.
    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட விழா குழுவினர், கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai