Enable Javscript for better performance
வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 07th March 2017 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணி - வாழைப்பந்தல் சாலை தனலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீவராகி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் தமிழக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார்.
    ஆரணி, தனலட்சுமி நகரில் புதிதாக ஸ்ரீவராகி அம்மன் கோயில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
    இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு  அம்மனை வழிபட்டார். கோயில் நிர்வாகி பி.ஜி.பாபு உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai