Enable Javscript for better performance
ஆறு, ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆறு, ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

    By DIN  |   Published on : 08th March 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள பாம்பாறு மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    தண்டராம்பட்டு வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மகேந்திரமணி, துணை வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சஜேஸ்பாபு வரவேற்றார்.
    கூட்டத்தில், கடந்த மாதம் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பேசியதாவது:
    தண்டராம்பட்டு பகுதி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்ட இடம் ஒதுக்க வேண்டும். சின்னியம்பேட்டை பகுதி பள்ளிக் கட்டடம், சாலைகளை புதுப்பிக்க வேண்டும். பாம்பாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
    இதையடுத்து பேசிய கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai