Enable Javscript for better performance
இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    தானிப்பாடி அருகே திருமணமான 7 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
    தானிப்பாடியை அடுத்த மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணிகண்டன் (21). இதே பகுதியைச் சேர்ந்தவர் நிஷா (17). இவர்களுக்கு 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாள்களில் இருந்தே தம்பதிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாம்.
    இந்தநிலையில், திங்கள்கிழமை மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால் மனமுடைந்த நிஷா, விஷ மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதைக் கவனித்த அவரது உறவினர்கள், நிஷாவை மீட்டு, தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, தானிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களில் நிஷா உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai