Enable Javscript for better performance
கால்நடை மருத்துவ முகாம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்.
    முகாமில் இந்தப் பகுதியில் உள்ள 650 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசியும், நோய்களை கண்டறிந்து அதற்குண்டான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், கால்நடை மண்டல இணை இயக்குநர் கந்தசாமி, துணை இயக்குநர் குருமூர்த்தி, உதவி இயக்குநர் நாராயணன், வட்டாட்சியர் தமிழ்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, பாசறை மாவட்டச் செயலர் கஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஜெமினிராமச்சந்திரன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai