Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி, செய்யாறில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
    செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். எனினும், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
    இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவ மழை பொய்த்ததால் செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    எனவே, இந்த 2 வட்டங்களையும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரியும், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது அளிக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் யாரும் பங்கேற்கவில்லை என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai