சுடச்சுட

  

  வந்தவாசி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் (ரேஷன்) திமுக எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
  வந்தவாசி பெரியகாலனி அருகில் உள்ள 2 நியாயவிலைக் கடைகள், பொன்னூர் கிராமத்தில் உள்ள ஒரு நியாயவிலைக் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட அவர் அந்தக் கடைகளிலிருந்த பதிவேடுகளை பார்வையிட்டார். ஒவ்வொரு கடையிலும் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, கடந்த ஓர் ஆண்டில் அரசு அந்தக் கடைகளுக்கு அனுப்பியுள்ள பொருள்களின் விவரம், பொருள்கள் சரிவர வழங்கப்படுகிறதா என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
  பின்னர், அம்மையப்பட்டு, மும்முனி ஆகிய கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் சென்றார். ஆனால், அந்த 2 கடைகளும் மூடப்பட்டிருந்ததைப் பார்த்த அவர், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் செல்லிடப்பேசி மூலம் புகார் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  நியாயவிலைக் கடைகளுக்கு பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை சுமார் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே அரசு விநியோகம் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சட்டப்பேரவையில் வலியுறுத்துவேன் என்றார்.
  மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் ப.இளங்கோவன், எஸ்.சுரேஷ்கமல், நகரச் செயலர் கோட்டை பாபு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai