சுடச்சுட

    

    நியாயவிலைக் கடை விற்பனையாளர் மீது தாக்குதல்: கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 08th March 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அருகே நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் முற்றுகையிட்டனர்.
    வெம்பாக்கம் வட்டம், சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர், மாங்கால் கூட்டுச்சாலையில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
    அண்ணாதுரை திங்கள்கிழமை தான் பணியாற்றும் நியாயவிலைக் கடைக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக செய்யாறில் உள்ள கற்பகம் கூட்டுறவு பண்டகசாலைக்கு வந்தாராம். அப்போது, அங்கிருந்த பாரம் ஏற்றும் தொழிலாளிக்கும், அண்ணாதுரைக்கும் இடையே கூலி தொடர்பாக வாய்த்
    தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, அண்ணாதுரையை அந்தத் தொழிலாளி தாக்கியதாகக் கூறப்படுறது.
    இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் யாரும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்ல பண்டகசாலைக்கு செல்லவில்லை.
    மேலும், விற்பனையாளரைத் தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, செய்யாறில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை கூட்டுறவு துணைப் பதிவாளா அலுவலக கண்காணிப்பாளர் சேகரிடம் அவர்கள் அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai