சுடச்சுட

  

  பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

  By DIN  |   Published on : 08th March 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டுமானப் பொறியியல் துறை மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் இணைந்து வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.
  நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஆறுமுகமுதலி முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வட்டார கட்டுமானப் பொறியியல் கழகத் தலைவர் பொறியாளர் ஜெ.ஸ்ரீதர், திருவண்ணாமலை மாவட்ட கட்டுமானப் பொறியாளர் ஆர்.சிவக்குமார், வேலூர் மாவட்ட கட்டுமானப் பொறியாளர் கே.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு, கட்டுமானத் துறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல்வேறு கட்டமைப்பு முறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
  மேலும், இந்தப் பயிற்சி முகாமில் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவன பொறியாளர்கள் கலந்துகொண்டு, சிமென்ட்டின் தரம், அதனை பாதுகாக்கும் முறை, தரம் குறித்த சோதனைகள், கட்டுமானத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
  பயிற்சியில் கல்லூரியைச் சேர்ந்த கட்டுமானப் பொறியியல் துறை மாணவர்கள், கட்டடவியல் களப் பொறியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சி புதன்கிழமையும் நடைபெற உள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai